மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ.வை தாக்கியவர் கைது


மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ.வை தாக்கியவர் கைது
x

மேற்கு வங்காளத்தில் இந்திய மதசார்பற்ற முன்னணி கட்சியை சேர்ந்த சித்திக், எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் இந்திய மதசார்பற்ற முன்னணி கட்சியை சேர்ந்த சித்திக், எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மாநில அரசு ஊழியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

கூட்டத்தில் சித்திக் எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நபர் எழுந்து கேள்வி கேட்டபடி அவரை அடிக்கப்பாய்ந்தார். பின்னர் எம்.எல்.ஏ.வை தள்ளிவிட்டார். உடனே மற்றவர்கள், அந்த நபரை தாக்கத்தொடங்கினர். பின்னர் அவரை போலீஸ் பிடித்துச்சென்றது. எம்.எல்.ஏ.வை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story