சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ


சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ
x

சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நேற்று இரவு 7 மணிக்கு நிலவுக்கான மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்து, நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் இணையதள பக்கத்தில் இந்த காணொலி வெளியாகியுள்ளது.

நிலவை நோக்கி பயணிக்கும் சந்திரயான் 3

நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம்,அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்த பட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவில் நிலவு சுற்றுப்பாதையில் சுற்றிவர உள்ளது. இதன் உயரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விண்கலத்தின் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் வருகிற 23-ந்தேதி நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம் செய்ய முயற்சி செய்யப்பட உள்ளது.

விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ரோபோ வாகனத்திற்கு 'பிரக்யான்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. 6 சக்கர வாகனத்தில் நிலவின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை வழங்குவதற்கான கருவிகளுடன் கட்டமைக்கப்பட்டு உள்ளன.நிலவுப்பாதையில் இருந்து, விண்கலம் நிலவுக்கு மேலே சுமார் குறைந்தபட்சம் 114 கி.மீ. அருகேயும், அதிகபட்ச தூரமாக 18 ஆயிரத்து 72 கி.மீ. தொலைவிலும் சந்திரயான்-3 விண்கலம் சுற்ற உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக நிலவுக்கு சுமார் 121 கி.மீ. அருகிலும், அதிகபட்சம் 4 ஆயிரத்து 303 கி.மீ. தொலைவிலும் சுற்றும் வகையில் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து நிலவுக்கு சுமார் 178 கி.மீ., அருகிலும், 1,411 கி.மீ., தொலைவிலும் 'சந்திரயான்-3' சுற்றும் வகையில் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட உள்ளது. அதேபோல், சுமார் 126 கி.மீ., அருகிலும், 164 கி.மீ. தொலைவிலும் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட உள்ளது.

விண்கலத்தின் சோதனைகள்

அதற்கு பிறகு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேண்டர் நிலவின் மேற்பரப்பு தெர்மோபிசிக்கல் பரிசோதனை, வெப்ப கடத்துத்திறன் மற்றும் வெப்பநிலையை அளவிடுவதற்கு, தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நில அதிர்வை அளவிடுவதற்கு நில அதிர்வு நடவடிக்கைக்கான கருவி, பிளாஸ்மா அடர்த்தி மற்றும் அதன் மாறுபாடுகளை மதிப்பிடுவதற்கான கருவி உள்ளிட்டவை அவற்றில் பொருத்தப்பட்டு உள்ளது. இது வளிமண்டலத்தின் அடிப்படை கலவை பற்றிய தரவுகளை சேகரிக்கும். இதன் எடை 26 கிலோ மற்றும் லேண்டரைப் போலவே, ஒரு நிலவு நாள் அதாவது 14 நாட்கள் பணி ஆயுளைக் கொண்டுள்ளது என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story