நடப்பு ஆண்டில் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது கடினம்-டி.கே.சிவக்குமார் பேட்டி


நடப்பு ஆண்டில் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது கடினம்-டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஆண்டில் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது கடினம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் திட்டங்களுக்கு ஒதுக்க கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நடப்பு ஆண்டில் பொதுப்பணி, நீர்ப்பாசனம், கிராம வளர்ச்சி உள்ளிட்ட எந்த துறைக்கும் கூடுதல் நிதி ஒதுக்குவது கஷ்டம். இதுகுறித்து எம்.எல்.ஏ.க்களுக்கு எடுத்துக் கூறப்படும். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அனைத்து துறைகளின் மந்திரிகளுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சற்று பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தினோம்.

அந்தந்த துறைகளில் தற்போது பணிகள் நடைபெறும் திட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு தங்கள் தொகுதியின் வளர்ச்சி மீது அதிக அக்கறை உள்ளது. இந்த ஆண்டு உத்தரவாத திட்டங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் முந்தைய பா.ஜனதா அரசு கஜானாவை காலி செயதுவிட்டு சென்றுவிட்டது. அதனால் வளர்ச்சி பணிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story