பிரிவினை ஏற்படுத்துவது தான் பா.ஜனதாவின் கலாசாரம்; காங்கிரஸ் விமர்சனம்
பிரிவினை ஏற்படுத்துவது தான் பா.ஜனதாவின் கலாசாரம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பெங்களூரு;
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா கட்சிக்கு எப்போதும் ஒன்று சேர்ப்பது, உருவாக்குவது பற்றி தெரியாது. பிரிவினை ஏற்படுத்துவது, அழிப்பது தான் பா.ஜனதாவின் கலாசாரம். கையால் ஆகாதவர்கள் தான் காங்கிரசின் பேனர்களை கிழிப்பார்கள்.
40 சதவீத கமிஷன் பெறும் பா.ஜனதா அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்கிறார்கள். குந்தாப்புராவில் உள்ள கங்கொல்லியில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது மற்றொரு ஊழலுக்கு சாட்சி ஆகும்.
கமிஷன் விவகாரம் குறித்து லோக்அயுக்தா, அரசுக்கு ஒரு அறிக்கை வழங்கியது. அதன் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஊழலுக்கு ஆதாரங்கள் வழங்குமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்கிறார்.இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.