பணம், மதுவுக்காக ஓட்டுகள் விற்கப்படுவது வேதனை அளிக்கிறது


பணம், மதுவுக்காக ஓட்டுகள் விற்கப்படுவது வேதனை அளிக்கிறது
x

பணம், மதுவுக்காக ஓட்டுகள் விற்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று சபாநாயகா் காகேரி கவலை தெரிவித்துள்ளார்.

மைசூரு:-

உணவு பொருட்கள் உற்பத்தி

மைசூருவில் நடந்த கருத்தரங்கில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-மைசூரு உலக பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். நமக்கு சுதந்திரம் கிைடத்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திரத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த மகான்களின் சாதனை அபாரமானது. சுதந்திரம் கிடைத்தபோது நாட்டில் உணவு பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் ெவளிநாடுகளில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. ஆனால் தற்போது உணவு பொருட்கள் உற்பத்தியில் நம் நாடு சுயமாக சாதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் விவசாயிகள் தான்.

சுதந்திரம் கிடைத்தபோது ஒருவரின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.299 ஆக இருந்தது. தற்போது ஒருவரின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.1,18,235 ஆக உள்ளது. தற்போது ஒரே நேரத்தில் 35 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் சாமர்த்தியம் நம்மிடம் உள்ளது.

வேதனை அளிக்கிறது

நம் நாட்டில் ராணுவம் பலமாக உள்ளது. எந்த நோய் வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் நமது சுகாதாரத்துறையிடம் உள்ளது. கொரோனா நோய் பரவிய சமயத்தில் நம் நாட்டில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு ெசலுத்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கும் நமது தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இது பெருமைக்குரிய விஷயம். நம் நாட்டின் அரசியலமைப்பு சாசனம், உலகத்திலேயே மிகப்பெரிய மற்றும் புனிதமான சாசனமாகும். சாமானிய மக்கள் கூட ஜனாதிபதி, பிரதமர், முதல்-மந்திரி ஆவதற்கு நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் தேர்தல்கள் மது மற்றும் பணத்தின் அடிப்படையில் நடக்கிறது. பணம், மதுவுக்காக ஓட்டுகள் விற்கப்படுகிறது. இது வேதனை அளிக்கிறது.

ஜனநாயக காவல்காரர்கள்

இளைஞர்கள், இளம் வாக்காளர்கள் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தின் காவல்காரர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களும் என்னுடைய ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று உறுதி அளிக்க ேவண்டும். இவ்வாறு அவா் பேசினார். இந்த கருத்தரங்கில் கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பூர்ணிமா, மேயர் சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாகேந்திரா, தன்வீர் சேட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story