அமலாக்கத்துறை முன் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக மாட்டார் என தகவல்
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
புதுடெல்லி,
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அவர் இன்று மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story