அரசியல் கொலைகள் நடப்பது வருத்தம் அளிக்கிறது; மந்திரி மாதுசாமி பேட்டி


அரசியல் கொலைகள் நடப்பது வருத்தம் அளிக்கிறது; மந்திரி மாதுசாமி பேட்டி
x

அரசியல் கொலைகள் நடப்பது வருத்தம் அளிக்கிறது என்று மந்திரி மாதுசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சட்டம்-சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எந்த மதத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும் சரி அவர்களை வெறுப்பது சரியல்ல. கொலைக்கு கொலை என்று பழிவாங்கும் சம்பவங்களில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. அரசியல் ரீதியிலான கொலைகள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையவில்லை. கடலோர மாவட்டங்களில் சில கொலைகள் நடந்துவிட்டதை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான கொலைகள் நடைபெற்றன.

தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். தவறு செய்த அனைவரையும் போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

1 More update

Next Story