தெலுங்கானா மந்திரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐதரபாத்,
தெலுங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மந்திரியின் மகன் மகேந்திரரெட்டி, மருமகள் மரி ராஜசேகர் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மந்திரிக்கு தொடர்புடைய இடங்களில் 50 குழுக்களாக பிரிந்து ஐ.டி. ரெய்டு சோதனை நடைபெற்று வருகிறது.
சுமார் 150 முதல் 170 அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, மல்லா ரெட்டி குழுமம் நடத்தும் நிறுவனங்களின் வருமானப் பதிவேடுகளை சோதனை செய்தனர்.
மல்லா ரெட்டி குழுமம் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story