ஐ.டி. ரெய்டில் ரூ.390 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்; எண்ணி முடிக்க 13 நேரம்...


ஐ.டி. ரெய்டில் ரூ.390 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்; எண்ணி முடிக்க 13 நேரம்...
x

மராட்டியத்தில் ஐ.டி. ரெய்டில் பண்ணை வீட்டில் சிக்கிய ரூ.390 கோடி சொத்துகளில் பணம் முழுவதும் எண்ணி முடிக்க 13 நேரம் ஆகியுள்ளது.

புனே,



மராட்டியத்தின் ஜல்னா மாவட்டத்தில் பணப்பரிமாற்றம் மற்றும் அதிகப்படியான வருவாயை கணக்கில் காட்டாமல் வரிஏய்ப்பு செய்வது உள்ளிட்டவற்றில் ஸ்டீல் தொழிலதிபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து வருமான வரி துறையினர் கடந்த 1-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்காக நாசிக் நகரை சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொண்ட 5 குழுவினர் சென்று சோதனை நடத்தினர். இதன்படி தொழிலதிபர்கள் 4 பேரின் வீடுகளில் நடந்த சோதனையில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, பண்ணை வீட்டுக்கு சென்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், கப்-போர்டுகள், படுக்கை அறைகள் மற்றும் சில கோணி பைகளில் பணம் கற்றை கற்றையாக, பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுதவிர, அவர்களின் நிலம், பங்களா உள்ளிட்டவற்றின் சட்ட ஆவணங்கள் மற்றும் வங்கி பரிமாற்ற ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொழிலதிபர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. அவர்கள், ஸ்டீல், துணி வர்த்தகம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அவர்களது பினாமி சொத்துகளும் சோதனையில் சிக்கியுள்ளன. கடந்த 8-ந்தேதி வரை நடந்த இந்த சோதனையில், ரூ.58 கோடி பணம், ரூ.16 கோடி மதிப்பிலான 32 கிலோ எடை கொண்ட தங்கம், வைர நகைகள் மற்றும் பிற ஆவணங்களையும் கைப்பற்றினர்.

ரூ.300 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணமும் சிக்கியுள்ளன. இதன்படி மொத்தம், ரூ.390 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பணம் முழுவதும் எண்ணி முடிக்க 13 நேரம் வரை எடுத்து கொண்டது.


Next Story