சட்டவிரோதமாக மனைவியோடு சிறைக்குள் குடும்பம் நடத்திய எம்.எல்.ஏ...!


சட்டவிரோதமாக மனைவியோடு சிறைக்குள் குடும்பம் நடத்திய எம்.எல்.ஏ...!
x
தினத்தந்தி 16 Feb 2023 3:29 PM IST (Updated: 16 Feb 2023 3:39 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக மனைவியோடு சிறைக்குள் குடும்பம் நடத்திய எம்.எல்.ஏவை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

லக்னோ

உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்தார் அன்சாரி என்பவர் மவு தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மீது 30 வழக்குகள் உள்ள நிலையில், கிருட்டிணானந்த் ராய் என்பவரை கொலை செய்த வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் ஐறைத்தண்டனை விதிக்கபட்டு சிறையில் உள்ளார்.

இவரது இரண்டு மகன்களில் மூத்தவரான அப்பாஸ் அன்சாரி என்பவர் தேசிய அளவிலானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் தற்போது பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி என்ற கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக உள்லார்.தந்தையை போல குற்றப்பின்னணி கொண்ட இவர் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருடன் சிறையில் இவரின் மனைவி நிக்கத் பானு என்பவர் சட்டவிரோதமான தங்கி இருந்ததாவும், நிக்கத் பானு சிறை பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடாமல் சிறை ச்சூபிரெண்டு அசோக் சாகரின் உதவியுடன் அவரின் சிறை அறையில் இருவரும் வசித்து வருவதாக சித்ரகுட் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பிருந்தா சுக்லாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் அவர்களை மடக்கி பிடிக்க முடிவு செய்த பிருந்தா சுக்லா, சித்தரகுட் கலெக்டர் அபிஷேக் ஆனந்துடன் ரகசியமாக தனியார் வாகனத்தில் சிறைக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார். பின்னர் சிறை சூபிரெண்டு அசோக்கின் அலுவலக அறைக்கு சென்றபோது அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

பின்னர் உள்ளே சென்றுபார்த்தபோது கைதி அப்பாஸ் அன்சாரி தனது மனைவி நிக்கத் பானுவுடன் அங்கு தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும், மனைவியின் தொலைபேசி மூலம் தனது வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்ததுடன், பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

சிறையில் அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,போலீஸ் சூப்பிரெண்டு பிருந்தா சுக்லாவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் உத்தர பிரதேச சிறைத்துறையின் அவலத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story