ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!


ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு..!
x

காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு,

காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சிங்காம் என்ற இடத்தில் இருந்து சாட்ரூ என்ற கிராமத்துக்கு ஒரு காரில் சிலர் நேற்று சென்றனர்.

போண்டா என்ற கிராமத்துக்கு அருகில் மலைச்சாலையில் அந்த கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ராணுவத்தினருடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். 3 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், " கிஷ்த்வாரில் நடந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்படும் " இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story