ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.சி. போஜேகவுடா


ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.சி. போஜேகவுடா
x

காங்கிரசுக்கு ஆதரவாக ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.சி. போஜேகவுடா ஓட்டு கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கமகளூரு:-

ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.சி.

சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக எம்.எல்.ஏ. சி.டி.ரவி. மீண்டும் போட்டியில் உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தம்மய்யாவும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் திம்மா ஷெட்டியும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.சி. போஜேகவுடா, சி.டி.ரவியை தோற்கடிக்க நமது கட்சிதொண்டர்கள் அனைவரும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடிக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் போஜேகவுடா, காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியினருடன் பேசிய புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

காங்கிரசுக்கு வாக்கு சேகரிப்பு

இதனால் சி.டி.ரவி எம்.எல்.ஏ. தன்னை தோற்கடிக்க ஜனதாதளம் (எஸ்) காங்கிரசுடன் கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ஜனதாதளம் (எஸ்) கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் போஜேகவுடா எம்.எல்.சி., காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கிராமம், கிராமமாக சென்று வாக்குசேகரிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறது. அதாவது போஜேகவுடா எம்.எல்.சி., சிக்கமகளூரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சக்கராயப்பட்டணா அருகே சிக்ககவுஜா கிராமத்தில் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து பொதுமக்களுடன் அவர் பேசுகிறார்.

சி.டி.ரவிக்கு பாடம் புகட்ட வேண்டும்

அதில், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவியை தோற்கடிக்க காங்கிரசுக்கு கட்டாயம் வாக்களியுங்கள். சித்தராமையாவை சித்தமுல்லகான் என கூறியவருக்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். இப்படி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பற்றி தரக்குறைவாக பேசி வரும் சி.டி.ரவிக்கு பாடம் புகட்ட வேண்டும். நீங்கள் பால் வியாபாரி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றால், சித்தராமையா பற்றி அவதூறாக பேசியவருக்கு இந்த தேர்தலில் உரிய பாடம் கற்றுக்கொடுங்கள். நீங்கள் அனைவரும் பால் வியாபாரி சமுதாயத்தை சேர்ந்தவர் என்றால் சித்தராமையாவின் மானத்தை காப்பாற்றுங்கள்.

சி.டி.ரவிவை வீழ்த்த அனைவரும் காங்கிரசுக்கு ஓட்டுப்போட வேண்டும். இல்லையெனில் நீங்கள் குருப சமுதாயத்தினர் இல்லை.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் புயலை கிளப்பி வருகிறது.


Next Story