ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது


ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது
x

ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியானது


2023-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8,23,967 தேர்வர்கள் இதனை எழுதியிருந்தனர்.

தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ள முடியும்.


Next Story