நடிகை மனைவியை கொள்ளையர்கள் கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் கைது


நடிகை மனைவியை கொள்ளையர்கள் கொலை செய்ததாக நாடகமாடிய கணவர் கைது
x

ரியா குமாரி கொலை வழக்கில், போலீசார் சந்தேக கண்ணோட்டத்துடன் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹவுரா

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர் படத்தயாரிப்பாளர் ஆவார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் நேற்று காரில் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பக்னன் காவல்நிலையத்திற்குட்பட்ட மகிஷ்ரேகா என்ற இடத்தில் அவர்களது காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள மறித்தனர். பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து, அவரது கணவரை ரியா குமாரி மீட்க முயற்சித்தார்.

அப்போது, ரியா குமாரியை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ரியா குமாரியை அவரது கணவர் காரில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ரியா குமாரி கொலை வழக்கில், போலீசார் சந்தேக கண்ணோட்டத்துடன் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியாவின் கணவர் பிரகாஷ் குமாரின் சம்பவத்தை முழுமையாக நம்பாததால், சம்பவ இடத்திற்கு அருகில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

சம்பவத்திற்குப் பிறகு, குமாரியின் குடும்பத்தினர் குமாரியை மிரட்டி துன்புறுத்தியதாக பிரகாஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி அவரது இரண்டு சகோதரர்கள் மீது புகார் அளித்து உள்ளனர்.

இந்த நிலையில் ரியாவின் கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story