மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற மந்திரி நோயாளி ஒருவருக்கு ரத்த தானம் கொடுத்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி பன்னகுப்தா. அவர் ஜம்ஷத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வுக்காக சென்றிருந்தார்.
அப்போது, ஒரு பெண் தனது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு யாரும் ரத்த தானம் செய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளாதாக கூறினார்.
இதையடுத்து, நோயாளிக்கு தேவைப்படும் ரத்த வகையும், தனது ரத்த வகையும் ஒன்று தான் என தெரிந்துகொண்ட மந்திரி குப்தா தனது ரத்தத்தை தானம் செய்தார்.
மந்திரி தானம் செய்த ரத்தத்தை கொண்டு அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இது குறித்து மந்திரியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நான் முதலில் மனிதன். சகோதரியின் கணவரின் உயிரை காப்பாற்றுவது எனது கடமை' என்றார்.
Related Tags :
Next Story