ஜார்கண்ட்: மாவோயிஸ்டுகள் மோதலில் இருவர் பலி
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இடையேயான மோதலில் இருவர் பலியாகினர்.
ராஞ்சி,
ஜார்கண்டின் பலாமு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு இரு கும்பல்களாக பிரிந்து மோதிக்கொண்டனர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
துப்பாக்கி சண்டை சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கே தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்டு தளபதி உள்பட இருவர் செத்து கிடந்தது தெரிந்தது.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் சல்லடையான அவர்களின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story