அரசியலமைப்பை உருவாக்குவதில் நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை துணை ஜனாதிபதி பரபரப்பு பேச்சு

அரசியலமைப்பை உருவாக்குவதில் நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை துணை ஜனாதிபதி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 19 March 2023 9:45 PM GMT (Updated: 19 March 2023 9:45 PM GMT)

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பி.எஸ். ராமமோகனராவ் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இந்த புத்தகத்தை வெளியிட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.

புதுடெல்லி,

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பி.எஸ். ராமமோகனராவ் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இந்த புத்தகத்தை வெளியிட்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசியலமைப்பு என்பது மக்களிடம் இருந்து, நாடாளுமன்றம் வழியாக வர வேண்டும். இதில் நிர்வாகத்துக்கு எந்த பங்கும் கிடையாது. அரசியலமைப்பை உருவாக்குவதில் நிர்வாகத்துக்கோ, நீதித்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கோ எந்த பங்களிப்பும் இல்லை.

அரசியலமைப்பின் பரிணாம மாற்றம் என்பது நாடாளுமன்றத்தில்தான் நடைபெற வேண்டும். அதில் வேறு எந்த உயரிய அமைப்பும் வர முடியாது. அது நாடாளுமன்றத்துடன்தான் முடிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையேயான உறவில் லட்சுமண ரேகையைத் தாண்டக்கூடாது என நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Next Story