பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை விவகாரம்: தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சர்மா நியமனம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை விவகாரம்: தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி சர்மா நியமனம்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து கடந்த மாதம் 28-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

பொதுவாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி (உபா) ஒரு இயக்கத்தை தடை செய்தால், அதற்கு போதிய முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கம். அந்த தீர்ப்பாயத்துக்கு பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியை தலைவராக நியமிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்ளும். அதைத்தொடர்ந்து, தீர்ப்பாயத்தின் தலைவரை நியமிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை மத்திய சட்ட மந்திரி கேட்டுக்கொண்டார். டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் சர்மாவை தீர்ப்பாயத்தின் தலைவராக டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.சி.சர்மா நியமித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பாணையை மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் தனியாக அறிவிப்பு வெளியிடும்.

Next Story