குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்பு


குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்பு
x

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவியேற்றுக்கொண்டார்.

காந்திநகர்,

குஜராத் ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகானி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத் காந்தி நகரில் உள்ள ராஜ்பவனில் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி பூபேந்திர படேல், குஜராத் சட்ட துறை மந்திரி ருஷிகேஷ் படேல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேலா திரிவேதி ஆகியோர் பங்கேற்றனர். சோனியா கோகானி வரும் 25-ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளதால் 9 நாட்கள் மட்டுமே அவர் இப்பொறுப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.


Next Story