இந்தியாவுக்கு வர உள்ள மேலும் 14 - 16 சிவிங்கிப்புலிகள் - மத்திய மந்திரி தகவல்


இந்தியாவுக்கு வர உள்ள மேலும் 14 - 16 சிவிங்கிப்புலிகள் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2023 5:15 AM IST (Updated: 10 Feb 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்ரிக்காவில் இருந்து 14 - 16 சிவிங்கிப்புலிகள், வரும் மாதங்களில் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட உள்ளதாக, மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

புதுடெல்லி,

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு செய்துவரும் பல்வேறு முயற்சிகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வனவிலங்கு பாதுகாப்பில் என் தந்தை முக்கியப் பங்காற்றியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே வனவிலங்கு ஆர்வலராக இருக்கும் எனக்கு இந்த துறை குறித்த ஆர்வமும், அக்கறையும் எப்போதும் உண்டு.வனவிலங்குகளை பாதுகாப்பதும், அவை பல்கி பெருகுவதை உறுதி செய்வதும் நம் பாரம்பரியத்தின் அங்கமாகவே இருந்து வருகிறது. அவற்றை பொக்கிஷமாக பாதுகாத்து, பராமரித்து வளர்த்து, அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை.

மத்திய அரசின் சிவிங்கிப்புலி பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தென்னாப்ரிக்காவின் நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள் கடந்த ஆண்டு செப்., மாதம் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டன. அவற்றை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு பிரதமர் மோடி அளித்தார். வரும் மாதங்களில், மேலும் 14 - 16 சிவிங்கிப்புலிகள் தென்னாப்ரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story