காங்கிரசில் இருந்து சமாஜ்வாதிக்கு தாவிய கபில் சிபில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
லக்னோ,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். கட்சியில் இருந்து விலகிய கபில் சிபில் உ.பி. மாநிலங்களவை தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபில் கட்சியில் இருந்து விலகினார். மே 16-ம் தேதியன்றே தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டதாக கபில் சிபில் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியில் 23 அதிருப்தி தலைவர்கள் இருந்த ஜி23 குழுவில் அங்கமாக இருந்தார் கபில் சிபில் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story