Normal
கர்நாடகத்தில் புதிதாக 197 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 1.11 சதவிகிதமாக உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் 17 ஆயிரத்து 716 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பெங்களூரு நகரில் 178 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 4 பேருக்கும், மைசூருவில் 4 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 4 பேருக்கும், பெலகாவி, சிக்பள்ளாப்பூர், ஹாசன், ராய்ச்சூர், ராமநகர், உத்தரகன்னடா, விஜயாப்புராவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பாகல்கோட்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2,029 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.11 ஆக உள்ளது.
Related Tags :
Next Story