'கார்கில் விஜய் திவாஸ்' நாட்டின் பெருமை, புகழின் சின்னம் - பிரதமர் மோடி


கார்கில் விஜய் திவாஸ் நாட்டின் பெருமை, புகழின் சின்னம் - பிரதமர் மோடி
x

‘கார்கில் விஜய் திவாஸ்’ தாய் நாட்டின் பெருமை மற்றும் புகழின் சின்னம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புது டெல்லி,

லடாக்கின், கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இந்தியப் பகுதியில் உள்ள மலை உச்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படைகளை எதிர்த்து போரிட்டு 1999 ஜூலை 26-ல் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும், கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.

கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டின் பாதுகாப்பில் வீரத்தின் உச்சத்தை எட்டிய துணிச்சலான மகன்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

'கார்கில் விஜய் திவாஸ்' தாய் நாட்டின் பெருமை மற்றும் புகழின் சின்னம். மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில், தாய்நாட்டைப் பாதுகாப்பதில் வீரத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய நாட்டின் அனைத்து துணிச்சலான மகன்களுக்கும் எனது வணக்கம். ஜெய் ஹிந்த். என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story