கர்நாடகத்தில் புதிதாக 989 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் இன்று 27 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இதில் புதிதாக 989 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் 927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தட்சிண கன்னடாவில் 21 பேர், பெங்களூரு புறநகரில் 14 பேர், தார்வாரில் 8 பேர், சிவமொக்காவில் 6 பேர், பல்லாரியில் 4 பேர், பெலகாவி, ஹாசனில் தலா 3 பேர், சித்ரதுர்கா, மண்டியா, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர்.
இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 78 ஆயிரத்து 79 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 81 பேர் இறந்து உள்ளனர். இன்று 802 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 39 லட்சத்து 31 ஆயிரத்து 263 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 6 ஆயிரத்து 693 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.