பெங்களூருவில் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


பெங்களூருவில் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெங்களூரு:

ஆலோசனை நடத்தினோம்

கர்நாடக சட்டசபையில் வெற்றி பெற்ற பா.ஜனதா புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, சி.டி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு பசவராஜ் பொம்மை நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம். சட்டசபை தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தோம். மத்திய பா.ஜனதா அரசு அமைந்து 9 ஆண்டுகள் ஆகிறது. இந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விவாதித்தோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்களுக்கு இலக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

விவாதிக்கவில்லை

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கவில்லை. மேலிட பொறுப்பாளர் அருண்சிங், எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது கட்சி மேலிடம் முடிவு செய்யும். எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் இன்று (நேற்று) நடக்கிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தலைவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story