சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நாளை மறுநாள் மவுன போராட்டம்


சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நாளை மறுநாள் மவுன போராட்டம்
x

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் மவுன தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு: சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் மவுன தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் இனறு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தொல்லை கொடுத்தனர்

அமலாக்கத்துறை சோனியா காந்திக்கு 26-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறி மீண்டும் நோட்டீசு அனுப்பியுள்ளது. என் மீதான விசாாணையின்போது எனது தாயாருக்கு இதே போல் தொல்லை கொடுத்தனர். வீட்டிலேயே விசாரணை நடத்துமாறு கோரி நான் கோர்ட்டுக்கு சென்றேன். ஆனால் சோனியா காந்தி கோர்ட்டுக்கு செல்லாமல் தைரியாக அமலாக்கத்துறையின் விசாரணையை நேரில் சென்று எதிர் கொண்டுள்ளார்.

இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னணி தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பு நிர்வாகிகளும் 26-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு பெங்களூருவில் மகாத்மா காந்தி சிலை முன்பு மவுனமாக தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ பாதயாத்திரை கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர், மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணா, நாகமங்களா, மேல்கோட்டை, பாண்டவபுரா வழியாக துமகூரு மாவட்டத்திற்கு செல்கிறது.

மகிழ்ச்சி அளிக்கிறது

இதுகுறித்து அந்த மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். காங்கிரசுக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க தயாராக உள்ளனர் என்ற கருத்தை வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மறைமுகமாக கூறியுள்ளார்.

இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை நான் பாராட்டுகிறேன். பா.ஜனதாவை பார்த்து ஊழல், முறைகேடு செய்வதை கற்றுக்கொள்ள வேண்டுமா?.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

1 More update

Next Story