பட்டாசு கடை தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கான சிகிச்சை செலவை கர்நாடக அரசு ஏற்கும்- சித்தராமையா


பட்டாசு கடை  தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கான சிகிச்சை செலவை கர்நாடக அரசு ஏற்கும்- சித்தராமையா
x
தினத்தந்தி 8 Oct 2023 1:26 PM GMT (Updated: 8 Oct 2023 3:23 PM GMT)

அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் காயம் அடைந்தோருக்கான சிகிச்சை செலவை கர்நாடக அரசு ஏற்கும் என்று அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர்.

இந்த கோர விபத்தில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர் நவீன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீபாவளி பண்டிகைக்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் மொத்தமாக கொண்டு வந்து இறக்கும்போது தீ விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று சித்தராமையா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தீ விபத்தில் காயம் அடைந்தோருக்கான சிகிச்சை செல்வை கர்நாடக அரசு ஏற்கும். அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து வழக்கு குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. பட்டாசு கடை உரிமையாளரின் கவனக்குறைவு, பாதுகாப்பின்மையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.


Next Story