முதல் மந்திரி பதவி: எனக்கு இல்லையென்றால் கார்கேவிற்கு கொடுங்கள்: டிகே சிவக்குமார் கோரிக்கை?


முதல் மந்திரி பதவி: எனக்கு இல்லையென்றால் கார்கேவிற்கு கொடுங்கள்: டிகே சிவக்குமார் கோரிக்கை?
x
தினத்தந்தி 17 May 2023 3:42 PM IST (Updated: 17 May 2023 4:01 PM IST)
t-max-icont-min-icon

இதனிடையே, கர்நாடக முதல் மந்திரி யார்? என்பது அடுத்த 48-72 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் முத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதல் மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையாவிற்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் இன்று தனித்தனியே ராகுல் காந்தியை சித்தராமையாவும் டிகே சிவக்குமாரும் சந்தித்தனர்.

கர்நாடக முதல் மந்திரியாக சித்தாரமையாவை கட்சி மேலிடம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் டிகே சிவக்குமார் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், தனக்கு முதல் மந்திரி பொறுப்பை கொடுக்காவிட்டால் மல்லிகார்ஜூன் கார்கேவிற்கு முதல் மந்திரி பொறுப்பை வழங்க வேண்டும் டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கேவிடம் டிகே சிவக்குமார் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. சித்தராமையாவிற்கு முதல் மந்திரி பொறுப்பை கொடுக்க டிகே சிவக்குமார் விரும்பவில்லை என்பதால் இந்த கோரிக்கையை முன்வைக்கலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே, கர்நாடக முதல் மந்திரி யார்? என்பது அடுத்த 48-72 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் முத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். ஆலோசனை நடப்பதாகவும் இன்று அல்லது நளை அல்லது நாளைமறுநாளுக்குள் முடிவு வரும் எனவும் தெரிவித்துள்ள சுர்ஜேவாலா, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


Next Story