கார்த்திகை பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா


கார்த்திகை பிரம்மோற்சவ விழா 6-வது நாள்:  சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் உலா
x

courtesyTTD

கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான காலை சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி,

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான இன்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் பத்மாவதி தாயார் ர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட காளைகள், குதிரைகள், யானைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டம், நடனம் நடந்தது.

மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.


Next Story