கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளம்: மத்திய மந்திரி அனுராக் தாகூர் பாய்ச்சல்


கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளம்: மத்திய மந்திரி அனுராக் தாகூர் பாய்ச்சல்
x

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளமாக திகழ்வதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் விமர்சித்தார்.

ஷிம்லா,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளமாக உள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் கடுமையாக தாக்கி பேசினார். ஷிம்லாவில் செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாகூரிடம், ரூபாய் நோட்டுக்களில் விநாயகர் மற்றும் லட்சுமி ஆகிய கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அனுராக் தாகூர் கூறியதாவது;- ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளமாக இருக்கிறார். கெஜ்ரிவால் பொய்யாக பேசுகிறார். தனது போலித்தனத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இத்தகைய புதிய பிரசாரங்களை முன்னெடுக்கிறார்" என்றார்.


Next Story