இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற "மிஸ்டு கால்" கொடுங்கள்- அரவிந்த் கெஜ்ரிவால்


இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற மிஸ்டு கால் கொடுங்கள்- அரவிந்த் கெஜ்ரிவால்
x

Image Courtesy: PTI 

இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல "மேக் இந்தியா நம்பர் 1" திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா உள்ளார்.

ஒருபக்கம் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்த, மறுபக்கம் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல "மேக் இந்தியா நம்பர் 1" திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காணொலி வாயிலாக பேசிய அவர், " இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல எங்களின் "மேக் இந்தியா நம்பர் 1" பணியில் மக்கள் சேர வேண்டும். இதற்காக 9510001000 என்ற எண்ணை வெளியிடுகிறேன். இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற இந்த பணியில் சேருங்கள் " என தெரிவித்துள்ளார்.


Next Story