கேரளாவில் கவர்னர் கையெழுத்திடாததால் காலாவதியான சட்டங்களை நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!


கேரளாவில் கவர்னர் கையெழுத்திடாததால் காலாவதியான சட்டங்களை நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!
x

கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இன்று முதல் செப்டம்பர் 2 வரை சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

11 அவசரச் சட்டங்களில் கவர்னர் கையெழுத்திடாததால் அவை ரத்து செய்யப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 10 நாள் சிறப்பு அமர்வு கூட்டப்படுகிறது.கவர்னர் கையெழுத்திடாததால் காலாவதியான சட்டங்களை புதிதாக நிறைவேற்றுவதற்காக கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

கவர்னருக்கும், அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

லோக் ஆயுக்தாவின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. லோக்ஆயுக்தாவின் அதிகாரங்களைக் குறைப்பது, பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தைக் குறைப்பது போன்ற சட்டத் திருத்தங்கள் சட்டசபைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

காலாவதியான அரசாணைகளுக்குப் பதிலாக புதிய சட்டத்தை இயற்றுவதற்காக அமர்வு அவசரமாக கூட்டப்படுகிறது என்று சபாநாயகர் எம் பி ராஜேஷ் தெரிவித்தார்.

1 More update

Next Story