கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று அமெரிக்கா பயணம்


கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று அமெரிக்கா பயணம்
x

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அவர் 14-ந்தேதி வரை இருப்பார் என்றும், 10-ந் தேதி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் கேரள சபாவின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்பு ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்திற்குச் செல்லும் பினராயி விஜயன், அங்குள்ள தொழில் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கியூபா நாட்டிற்கு செல்கிறார். கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுடன் சபா நாயகர் ஷம்ஷீர், நிதி மந்திரி பாலகோபால் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள்.


Next Story