ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை அமல்படுத்தவில்லை; நிரூபித்தால் பதவி விலகுவேன் - கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்


ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை அமல்படுத்தவில்லை; நிரூபித்தால் பதவி விலகுவேன் - கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்
x

இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.

புதுடெல்லி,

கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை இயக்கவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார்.

கேரள உயர்கல்வித்துறையில் கவர்னர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் இடதுசாரிக் கட்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு மாபெரும் கண்டன பேரணியை நடத்தின. இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறிyஅதாவது:-

நான் ஆர்எஸ்எஸ்-ன் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறேன் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் கூறி வருகிறீர்கள். எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் நியமித்த ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிடவும். உடனே ராஜினாமா செய்கிறேன்.

கேரள நிதி அமைச்சர் என்னை பார்த்து, உ.பி.யில் பிறந்த ஒருவர் கேரளாவின் கல்வி முறையை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். இந்தியாவின் ஒற்றுமைக்கு அவர் சவால் விடுகிறார்.

அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்குவது முதலமைச்சரின் விருப்பம், எனக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆனால் என் கடமையை நிறைவேற்ற நான் இவ்வளவும் செய்ய வேண்டும் என்பதால் குறைந்தபட்சம் இதை கேரள மக்களுக்கு தெரியப்படுத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story