அரசுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல்


அரசுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல்
x

கோப்புப்படம்

அரசுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் சமீபத்தில் நிறைவடைந்த சட்டசபை கூட்டத்தொடரில் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, லோக் ஆயுக்தா திருத்த மசோதாக்களும் அடங்கும். இதில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாத 5 மசோதாக்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று ஒப்புதல் அளித்து விட்டார். மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சமீப காலமாக ேமாதல் நீடித்து வரும் நிலையிலும், அந்த மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்து விட்டார்.

அதேநேரம் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, லோக் ஆயுக்தா திருத்த மசோதா மற்றும் 4 மசோதாக்களை அவர் கிடப்பில் போட்டு உள்ளார்.

பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, லோக் ஆயுக்தா திருத்த மசோதாக்களுக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்த கவர்னர், அந்த மசோதாக்களில் கையெழுத்து போடமாட்டேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story