24 ஆயிரம் வைரங்களைக் கொண்ட மோதிரத்தை வடிவமைத்து கின்னஸ் சாதனை..!!


24 ஆயிரம் வைரங்களைக் கொண்ட மோதிரத்தை வடிவமைத்து கின்னஸ் சாதனை..!!
x

Image Courtesy : guinnessworldrecords.com

தினத்தந்தி 15 July 2022 5:39 PM IST (Updated: 15 July 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

ஒரே மோதிரத்தில் அதிக வைரங்கள் பதிக்கப்பட்ட கின்னஸ் சாதனையை இந்த மோதிரம் படைத்துள்ளது.

திருவனந்தபுரம்,

24 ஆயிரம் வைரங்களை கொண்ட மோதிரத்தை செய்து கேரளாவை சேர்ந்த "எஸ்.டபிள்யூ.ஏ டைமண்ட்ஸ்" கின்னஸ் சாதனை படைத்துள்ளது. காளான் வடிவிலான இந்த மோதிரம் 24 ஆயிரத்து 697 சிறிய வைரங்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே மோதிரத்தில் அதிக வைரங்கள் பதிக்கப்பட்ட கின்னஸ் சாதனையை இந்த மோதிரம் படைத்துள்ளது. இதற்கு 'அமி' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமஸ்கிருத சொல்லான இது 'அழியாத தன்மை' மற்றும் 'நீண்ட ஆயுளை' குறிக்கிறது.

தங்கள் பிராண்ட்-யின் மீதான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க இந்த கின்னஸ் சாதனையை "எஸ்.டபிள்யூ.ஏ டைமண்ட்ஸ்" படைத்துள்ளது. இந்த மோதிரம் 3டி பிரிண்டிங் மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது. இந்த மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் வைரங்கள் தனித்தனியாக கைகளால் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story