மனைவி மீது ஆசிட் வீச முயன்ற நபர் - மகன் படுகாயம்


மனைவி மீது ஆசிட் வீச முயன்ற நபர் - மகன் படுகாயம்
x
தினத்தந்தி 12 May 2024 5:05 PM IST (Updated: 12 May 2024 8:49 PM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கும் சுரேந்தர்நாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சித்திரிகல்லி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர்நாத் (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

இதனிடையே, சுரேந்தர்நாத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி சுரேந்தர்நாத்தின் மனைவியும், மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சுரேந்தர்நாத் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மனைவி மீது வீசினார்.

அப்போது, அவர் தப்பிவிட்டார். ஆனால், ஆசிட் சுரேந்தர்நாத்தின் மகன் மீது விழுந்தது. இதில் அவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சுரேந்தர்நாத் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த சுரேந்தர்நாத்தின் மகனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சுரேந்தர்நாத்தை நேற்று கைது செய்தனர்.


Next Story