"ஹனிமூனில் புது பொண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி" விளக்கேற்ற வந்தவர் குத்துவிளக்கால் அடித்து கொலை


ஹனிமூனில் புது பொண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி விளக்கேற்ற வந்தவர்  குத்துவிளக்கால் அடித்து கொலை
x

வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாடிவிட்டு வந்து, மாமியார் வீட்டில் விளக்கேற்றிய புதுமணப்பெண், பத்தே நாளில் குத்துவிளக்கால் குத்திக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் ஆலப்புழா, கிடங்கம்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் நிகிதா( 25). இவருக்கும் வர்க்கலாவைச் சேர்ந்த அனீஷ் (35) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.நிகிதா ஏற்கனவே திருமணமாக சிறிது நாட்களிலேயே கணவனை பிரிந்தவர். முறைப்படி விவாகரத்து பெற்றவர் ஆவார்.

சமீபத்தில் தான் இருவரும் சார்ஜா சென்று விட்டு திரும்பி உள்ளனர். அனீஷுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் தம்பதியினர் திருமணம் முடிந்த உடனேயே வெளிநாடு சென்று வீடு திரும்பினர். ஆனால் அங்கு வைத்து கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாமல் சண்டை ஏற்பட்டு உள்ளது.

நிகிதா மீது அனிஷூக்கு சந்தேகம் இருந்து வந்தது. அவருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அனீஷின் குடும்பத்தினர் அவரது அறைக்குள் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டு உள்ளனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகிதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அனீஷ் ரத்தக்கறையுடன் இருந்தார்..உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்து நிகிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நிகிதாவின் தலையில் குத்துவிளக்கினால் (நிலவிளக்கு) அடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் அனிஷை கைது செய்தனர்.அனீஷ் போலீசில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.


Next Story