5 மாணவ-மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் சிறை


5 மாணவ-மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் சிறை
x

5 மாணவ-மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கன்னூரில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பி இ கோவிந்தன் நம்பூதிரி. 50 வயதான இவர் துவக்கப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். துவக்க பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத சிறுமிகளிடம், ஆசிரியர் போர்வையில் தனது கொடூர எண்ணத்தை வெளிக்காட்டியுள்ளார் இந்த ஆசிரியர். கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த சிறுமிகள் 4 பேருக்கு பாடம் சொல்லிகொடுப்பது போல் நைசாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 4 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதுக்கு கீழ் உள்ள 4 சிறுமிகள் ஒரு சிறுவன் என 5 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஆசிரியர் கோவிந்தனின் படுபாதக செயல், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அவரை சிறார்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை கோழிக்கோட்டில் உள்ள தளபிரம்ப்பா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கல்வி மையங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது ஆகிய சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், 3 சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு சட்டப்பிரிவுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story