பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்ற கிச்சா சுதீப்பின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது; நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்கிறார்


பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்ற கிச்சா சுதீப்பின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது; நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்கிறார்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்ற கிச்சா சுதீப்பின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொல்கிறார்

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராகவும், மக்கள் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்து வருபவர் சுதீப். இவர் கிச்சா என்ற படத்தில் நடித்து பிரபமானதன் மூலம் ரசிகர்களால் 'கிச்சா சுதீப்' என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாகவும், அவர் சொல்லும் தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவரான நடிகர் சுதீப், கர்நாடகத்தில் அதிகம் வாழும் வால்மீகி நாயக்கா சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். அந்த சமுதாயம் எஸ்.டி. பிரிவில் பெரிய சமுதாயமாக கருதப்படுகிறது. இதன்மூலம் நடிகர் சுதீப்பின் ஓட்டுக்களையும், வால்மீகி நாயக்கா சமுதாயத்தினரின் ஓட்டுக்களையும் அறுவடை செய்து விடலாம் என்று பா.ஜனதா கணக்கு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சுதீப்பின் இந்த அறிவிப்பு தனக்கு வியப்பாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நடிகர் சுதீப்பின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது' என்று கூறியிருக்கிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், கன்னடம், தெலுங்கு திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இருப்பினும் அவருக்கு அரசியல் களம் இதுவரையில் வெற்றிக்கனியை தரவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியில் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story