புதுச்சேரி முன்னாள் துணைநிலை கவர்னர் கிரண் பேடியின் "அச்சமற்ற ஆட்சி" புத்தகம் இந்தியில் வெளியீடு!
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி எழுதிய “அச்சமற்ற ஆட்சி” என்ற புத்தகம் இன்று இந்தியில் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி,
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி எழுதிய "அச்சமற்ற ஆட்சி" என்ற புத்தகம் இன்று இந்தியில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை கவர்னர் டாக்டர் கிரண் பேடி எழுதிய 'அச்சமற்ற ஆட்சி' என்ற புத்தகம் இந்தியில் 'நிர்பீக் பிரச்சாஸன்' என்று மொழிபெயர்க்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த புத்தகம் புதுச்சேரியின் லெப்டினன்ட் கவர்னராக டாக்டர் பேடியின் ஐந்தாண்டு கால சேவையின் அடிப்படை உண்மைகள் மற்றும் அவரது 40 ஆண்டுகால இந்திய காவல்துறை சேவையின் பரந்த அனுபவத்தின் அடிப்படையிலானது. டைமண்ட் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளிய்யிட்டுள்ளது.
இந்த புத்தகத்தில், பொறுப்பான நிர்வாகத்தின் சரியான நடைமுறைகளை ஆசிரியர் நிரூபிக்கிறார். குழு மனப்பான்மை, ஒத்துழைப்பு, நிதி விவேகம், பயனுள்ள காவல், சேவைகளில் பிணைப்பு மற்றும் அச்சமற்ற தலைமையின் மூலம் முடிவெடுப்பதை குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார்.