மேலும் 3 கால பதவி நீட்டிப்புக்கு கே.கே.வேணுகோபால் சம்மதம்


மேலும் 3 கால பதவி நீட்டிப்புக்கு கே.கே.வேணுகோபால் சம்மதம்
x

மேலும் 3 கால பதவி நீட்டிப்புக்கு கே.கே.வேணுகோபால் சம்மதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நமது நாட்டின் அட்டார்னி ஜெனரலாக ( அரசு தலைமை வக்கீலாக) கே.கே.வேணுகோபால் (வயது 91), கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இன்று (30-ந் தேதி) முடிகிறது.

இந்த நிலையில் இவரது பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி நீட்டிப்பை விரும்பாத போதும், 3 மாத காலத்துக்கு பதவி நீட்டிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு, அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story