வீடுகளில் கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி


வீடுகளில் கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
x

கேரளாவின் கொல்லம் பகுதியில் கிணறுகளில் உள்ள குடிநீரில் பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொல்லம்,

கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சாலுமூட்டில் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரியும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லம் மாவட்டம் அஞ்சாலுமூட்டில் ஸ்வர்ணம்மா என்பவரின் வீட்டில் உள்ள கிணற்று தண்ணீரில் திடீரென தீப்படித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிக்க தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அருகிலுள்ள பெட்ரோல் பம்பிலிருந்து கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீரை சீர்ப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story