பயங்கரவாத செயலுக்கு திட்டமா...! ரெயில் பயணிகள் மீது தீ வைத்த கொடூரனின் உருவப்படம் வெளியானது


பயங்கரவாத செயலுக்கு திட்டமா...! ரெயில் பயணிகள் மீது தீ வைத்த கொடூரனின் உருவப்படம் வெளியானது
x
தினத்தந்தி 3 April 2023 1:56 PM IST (Updated: 3 April 2023 2:05 PM IST)
t-max-icont-min-icon

கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை, என 3 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா(2), ரஹ்மத், சவுபிக் ஆகிய 3 பேர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

மர்ம நபர் தீவைத்து எரித்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயில் கோழிக்கோடு அருகே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தீவிரவாத சதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமானது என்று கருதப்படும் ஒரு பையும் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பெட்ரோல் அடங்கிய பாட்டில், ஊர் பெயர்களின் குறிப்பு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்ட டைரி, இயர்போன் மற்றும் கவர், இரண்டு மொபைல் போன்கள், உணவு அடங்கிய டிபன் பாக்ஸ், பர்ஸ், டி-சர்ட், காணப்பட்டன. இவை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்தனர். திருவனந்தபுரம், கோவளம், குளச்சல், கன்னியாகுமரி போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பேட்டில் உள்ள குறிப்பில் தச்சன் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் உள்ளது. இதற்கிடையில், குற்றவாளியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான ராஷிக்கின் உதவியுடன், குற்றம் சாட்டப்பட்டவரின் வரைபடம் ஒன்றை போலீசார் தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு அரசு சாரா தொழிலாளி என்பது ராஷிக்கிடம் இருந்து கிடைத்த தகவல்.


Next Story