கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பஸ் சேவை; மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்


கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பஸ் சேவை; மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பஸ் சேவையை மந்திரி ஸ்ரீராமுலு தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

பெங்களூருவில் பி.எம்.டி.சி. சார்பில் சில பகுதிகளுக்கு மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் கே.எஸ்.ஆர்.டி.சி. ஒப்பந்தம் செய்தது. இந்த நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் முதல் மின்சார பஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு, கொடி அசைத்து வைத்து மின்சார பஸ்சை தொடங்கி வைத்தார்.

பெங்களூருவில் இருந்து மைசூரு, சிக்கமகளூரு, விராஜ்பேட்டை, மடிகேரி, சிவமொக்கா, தாவணகெேர உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு இந்த மின்சார பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும். பஸ்சில் பயணிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன்களுக்கு சார்ஜ் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த பஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. 45 பேர் வரை இந்த பஸ்சில் அமர்ந்து பயணிக்கலாம். பஸ்சின் முன்பும், பின்பும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் மின்சார பஸ் சேவை தொடங்கி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story