கர்நாடகத்தின் அடுத்த முதல்-மந்திரி குமாரசாமிதான்; எம்.சீனிவாஸ் எம்.எல்.ஏ பேச்சு
மாநிலத்தில் அடுத்த முதல்-மந்திரி குமாரசாமிதான் என்று எம்.சீனிவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
மண்டியா:
மாநிலத்தில் அடுத்த முதல்-மந்திரி குமாரசாமிதான் என்று எம்.சீனிவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
அடுத்த முதல்-மந்திரி குமாரசாமி
மண்டியா தாலுகா முட்டகெரே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி பஞ்சரத்னா யாத்திரை நடந்தது. இந்த யாத்திரையில் கலந்து கொண்ட எம்.சீனிவாஸ் எம்.எல்.ஏ வீடு வீடாக சென்று ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து எடுத்து கூறினார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.சீனிவாஸ் கூறியதாவது:-
மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எச்.டி.குமாரசாமி பஞ்சரத்னா திட்டத்தை நடத்தி வருகிறார். அந்த பஞ்ரத்னா திட்டத்தின் மூலம் மண்டியாவில் வீடு வீடாக சென்று ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை எடுத்து கூறி வருகிறோம். இந்த முறை மண்டியாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வெற்றி பெறுவது உறுதி. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு மண்டியாவில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மாநில முழுவதும் ஜனதா தளம் (எஸ்) ஆதரவாளர்கள் பெருகியுள்ளனர்.
ரைத்த சைதன்யா திட்டம்
இதனால் இந்த சட்டசபை தேர்தலில் குமாரசாமி வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆவது உறுதி. ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால், வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேரம் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும். கிராமபுறம் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படும்.
ரைத்த சைதன்யா திட்டத்தின் கீழ் விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படும். நவ மார்க யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கடன் தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.