பிரதமர் அலுவலக இயக்குனராக லலிதாலட்சுமி நியமனம்..!


பிரதமர் அலுவலக இயக்குனராக லலிதாலட்சுமி நியமனம்..!
x

பிரதமர் அலுவலக இயக்குனராக லலிதாலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் அலுவலகத்தின் இயக்குனராக மூத்த அதிகாரி லலிதாலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2008-ம் ஆண்டு மேற்கு வங்காள பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தற்போது, கொல்கத்தாவில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அவரது அயற்பணியின் மீதிக்காலமான 2027-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதிவரை அவர் பிரதமர் அலுவலக இயக்குனர் பொறுப்பில் இருப்பார். அவரது நியமனத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story