சோனியாகாந்தியுடன் நிதிஷ்குமார், லாலு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நிதிஷ்குமார், லாலு ஆகியோர் நேற்று நேரில் சந்தித்தனர்.
புதுடெல்லி,
அரியானாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் டெல்லி சென்றார்.
அவரும், ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இல்லத்துக்கு ஒன்றாக சென்றனர். சோனியாகாந்தியை சந்தித்து பேசினர்.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் சோனியாகாந்தியை நிதிஷ்குமார் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்தது. காங்கிரசுக்கும், சில மாநில கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சி நடந்து வரும் நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Related Tags :
Next Story