லாலு பிரசாத் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


லாலு பிரசாத் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
x

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாட்னா,

பிகார் மாநிலத்தில் கால்நடைத் தீவன ஊழல் தொடா்புடைய வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் வெளியே உள்ளார்.

பாட்னாவில் உள்ள வீட்டில் இருக்கும் அவர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் அவரது தோள்ப்பட்டையில் லேசான எலும்பு முறிவு மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு லாலு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 More update

Next Story