சிங்கப்பூரில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்தது


சிங்கப்பூரில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்தது
x

ரஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

பாட்னா,

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதற்காக கடந்த வாரம் லாலுவும், அவருடைய குடும்பத்தினரும் சிங்கப்பூர் சென்றனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இத்தகவலை லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம், லாலுவுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

1 More update

Next Story